Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

உலகம் முழுவதும் முடங்கிய இணையதளங்கள்... இதுதான் காரணமா?

திடீரென்று காரணம் தெரியாமல் உலகமெங்கும் பல இணையதளங்கள் இன்று செயலிழந்திருக்கின்றன. இந்திய நேரப்படி சுமார் மூன்று மணியில் இருந்து உலகமெங்கும் இருக்கும் பயனர்கள் இந்த இணையதளம் வேலைசெய்யவில்லை, இதுவும் வேலை செய்யவில்லை என வரிசையாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். சிஎன்என், தி கார்டியன், தி நியூயார்க் டைம்ஸ், தி பினான்ஷியல் டைம்ஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி தளங்கள், இங்கிலாந்து அரசின் முக்கிய இணையதளங்கள் ட்விட்ச், ரெடிட், கிட்ஹப் போன்ற அதிக பயனர்கள் கொண்ட இணையதளங்கள் என இணையத்தில் பாதிக்கும் அதிகமான இணையதளங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

Error Message 503
இந்தத் தளங்களை அணுகும் போது 'Error 503 Service Unavailable' என்ற வாசகத்தையே பார்க்க முடிகிறது. ஒரு இணையதளத்தின் சர்வரை ஒரு ப்ரவுசரால் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால் இந்த எரர் வரும். இதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

Also Read: அமேசானுடன் இணைய இருக்கும் எம்.ஜி.எம்... 4000 படங்கள் இனி அமேசான் வசம்?!

எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்று தெளிவாகத் தெரியாத நிலையில், ஃபாஸ்ட்லி (Fastly) என்ற அமெரிக்க நிறுவனத்தின் சர்வர்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையால் இந்த தளங்கள் செயலிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தான் பல தளங்களுக்கும் 'Content Delivery Network(CDN) சேவையை வழங்கி வருகிறது. இந்தப் பிரச்சனையில் ஃபாஸ்ட்லி தளமும் செயலிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயற்சிகளை எடுத்து வருவதாக அதன் மற்றொரு பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது ஃபாஸ்ட்லி நிறுவனம்.

Fastly Update

இதற்கு பின்னணியில் திட்டமிடப்பட்ட சைபர் தாக்குதல் எதுவும் இருக்கிறதா என்பது இதுவரை தெரியவரவில்லை. ஏற்கெனவே பல்வேறு தளங்களும் செயல்படத்தொடங்கிவிட்டன. விரைவில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு இந்த இணைய முடக்கத்திற்கான காரணம் என்ன என்பதும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib