Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

20 லட்சம் இந்தியக் கணக்குகளை முடக்கிய வாட்ஸ்அப்; வெளிப்படைத்தன்மை அறிக்கையில் தகவல்! காரணம் என்ன?

புதிய டிஜிட்டல் கொள்கையின் கீழ் வெளிப்படைத்தன்மை அறிக்கையை சமூக வலைதள நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை வெளியிட வேண்டும். அதாவது வன்முறை, இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல், பாலியல் குற்றங்கள் தொடர்பாகப் பதிவிடும் கணக்குகள் மற்றும் உள்ளடக்கங்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும், குறிப்பிட்ட கணக்கின் மீது அளிக்கப்பட்ட புகார்கள் மற்றும் அந்த புகாருக்கு என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் தகவல்கள் கொண்ட அறிக்கையைக் குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும்.

அதன்படி கடந்த மாதம் ஃபேஸ்புக்கும், கடந்த வாரம் ட்விட்டரும் தங்கள் நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிட்டிருந்தன. தற்போது வாட்ஸ்அப்பும் அதன் முதல் வெளிப்படைத்தன்மை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
வாட்ஸ்அப்

அந்த அறிக்கையின் படி கடந்த மே 15 முதல் ஜூன் 15 வரை மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 20 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப். அந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 20,11,000 கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன. உலகில் மொத்தமாக முடக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் இது 25 சதவிகிதம் ஆகும். பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே இத்தனை வாட்ஸ்அப் கணக்குகளும் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கணக்குகளில் இருந்து ஸ்பேம் குறுஞ்செய்திகள் அதிகளவில் அனுப்பப்பட்டிருக்கின்றன என வாட்ஸ்அப் தெரிவித்திருக்கிறது. இந்த ஒரு மாத காலத்திற்குள் வாட்ஸ்அப்பின் குறை தீர்ப்பு அதிகாரிக்கு 345 புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தேவையான 63 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

Also Read: புதிய டிஜிட்டல் கொள்கை: ஏற்றுக் கொள்ளாத வாட்ஸ்அப்... மோதலில் ட்விட்டர்! என்ன நடக்கிறது?

சமூக வலைதளங்கள்

2019-ல் இருந்தே வாட்ஸ்அப்பில் முடக்கப்படும் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும், ஒவ்வொரு மாதமும் சராசரியாக 8 மில்லியன் கணக்குகள் முடக்கப்படுகின்றன. உலகளவில் முடக்கப்படும் வாட்ஸ்அப் கணக்குகளில் 4 கணக்கில் 1 வாட்ஸ்அப் கணக்கு இந்தியக் கணக்காக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.

ஆனால், இந்தியாவின் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இது பெரிய அளவில்லைதான். வாட்ஸ்அப்பிற்கு உலகம் முழுவதும் இருக்கும் 2 பில்லியன் பயனர்களின் 400 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது இந்தியா.

அடுத்த வெளிப்படைத்தன்மை அறிக்கை அடுத்த 30-45 நாள்களுக்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது வாட்ஸ்அப்.


from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib