சமீபத்தில் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் வகையில் 'ட்விட்டர் ப்ளூ' என்ற சேவை குறித்த அறிவிப்பையும் அதற்கு முன்னர், 'சூப்பர் ஃபாலோ' என்ற வசதியையும் ட்விட்டர் அறிவித்திருந்தது. இந்த சேவைகள் மூலம் குறிப்பிட்ட ட்விட்டர் பயனரைப் பின்தொடர்ந்து அவர் பதிவிடும் பதிவுகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து தற்போது இன்ஸ்டாகிராமும் அதே போன்றதொரு வசதியை இன்ஸ்டாகிராம் சேவையில் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறது. இந்தப் புதிய வசதியைத் தனிப்பட்ட முறையில் சோதனை செய்தும் வருகிறது இன்ஸ்டாகிராம்.
#Instagram is working on stories for fan clubs, exclusive stories visible only to fan club members
— Alessandro Paluzzi (@alex193a) June 21, 2021
ℹ️ It is not possible to take screenshots of exclusive stories. pic.twitter.com/GAYvRFVBss
இந்தப் புதிய வசதி குறித்த சில ஸ்கிரீன்ஷாட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அலெசான்ட்ரோ பலூசி (Alessandro Paluzzi) என்ற ட்விட்டர் பயனர். சமூக வலைத்தளங்களில் இது போன்று தனிப்பட்ட முறையில் சோதனை செய்யும் சேவைகள் குறித்துக் கண்டறிந்து பதிவிடுவது இவரது வழக்கம். அப்படித்தான் தற்போது இன்ஸ்டாகிராமின் புதிய கட்டண சேவை குறித்த படங்களையும் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த ட்விட்டர் பதிவுகளின்படி 'Exclusive Stories' என்ற வசதியை இன்ஸ்டாகிராம் சோதனை செய்திருக்கிறது. அதாவது குறிப்பிட்ட இன்ஸ்டா பயனருக்குக் கட்டணம் செலுத்தினால் மட்டுமே அவர் பதிவிடும் அந்தப் பதிவுகளைப் பார்க்க முடியும்.
Also Read: காசு கொடுத்தால் போட்ட ட்வீட்டை மீண்டும் திருத்தலாம்! கட்டணச் சேவையை அறிமுகப்படுத்தும் ட்விட்டர்!
மேலும், அப்படிப் பதிவிடும் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டும் எடுக்க முடியாது. நெருங்கிய நட்பில் உள்ளவர்களுக்கு மட்டும் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து நாம் பதிவுகளைப் பகிரும்போது பச்சை வண்ணத்தில் அந்த பதிவைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கும் அல்லவா, அது போலக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையில் இருக்கும் பதிவைச் சுற்றி ஊதா வண்ணத்தில் வட்டம் இருக்கிறது. மேலும் இது போலப் பல புதிய அப்டேட்களை இன்ஸ்டாகிராம் சோதனை செய்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை மட்டும் சொல்லியிருக்கிறார் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மாசரி (Adam Mosseri). ஆனால், அது குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இன்னும் என்னென்ன புதிய வசதிகளையும், அப்டேட்களையும் இன்ஸ்டாகிராம் கொண்டு வரவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
from விகடன்


No comments:
Post a Comment