Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

iPhone டு ஜியோ ஸ்மார்ட்போன்... செப்டம்பர் மாதம் வெளியாகும் மொபைல்கள் என்னென்ன?

புதிய மொபைல்கள் வெளியீடுகள்

செப்டம்பர் மாதம் ப்ரீமியம், மிட்ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் எனப் பல செக்மண்ட்களிலும் வெளியாகக் காத்திருக்கும் மொபைல்கள் என்னென்ன?

iPhone 13 Series

இந்த மாதம் வெளியாகவிருக்கும் ப்ரீமியம் மொபைல் என்றால் அது ஆப்பிள் iPhone 13 சீரிஸ்தான். iPhone 13 Mini, iPhone 13, iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max என 13 சீரிஸில் நான்கு மொபைல்களை வெளியிடுகிறது ஆப்பிள்.

Realme 8 Series

8 சீரிஸில் ஏற்கெனவே மூன்று மாடல்களை இந்தியாவில் வெளியிட்டிருக்கும் ரியல்மீ, 8S மற்றும் 8i என மேலும் இரண்டு மாடல்களை செப் 9-ல் வெளியிடுகிறது எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Vivo X70 Series

சீனாவில் செப் 7-ம் தேதி வெளியாகிறது Vivo X70 சீரீஸ் மொபைல்கள். X70, X70 Pro மற்றும் X70 Pro+ என மூன்று மாடல்களை வெளியிடுகிறது விவோ. சீனாவைத் தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிலும் X70 சீரிஸ் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Xiaomi Note 10 Lite

ஏற்கெனவே இந்தியாவில் வெளியாகி விற்பனையாகிக் கொண்டிருக்கும் Redmi Note 9 Pro-வை ரீபிராண்டிங் செய்து Redmi Note 10 Lite ஆக வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஷாவ்மி

Jio Phone Next

உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் என அறிவிக்கப்பட்ட Jio Phone Next வரும் செப் 10-ம் தேதி வெளியாகிறது. விலை 3,500 ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib