Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

எப்படி இருக்கிறது OnePlus Nord 2? ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம்! | 30 Days Review

ஜூன் மாதம்தான் நார்டு CE மொபைலை வெளியிட்டிருந்தது ஒன்ப்ளஸ் (OnePlus). மீண்டும் ஜூலை மாதமே நார்டின் வழித்தோன்றலான நார்டு 2 மாடலையும் வெளியிட்டுவிட்டது. நார்டை விட கொஞ்சம் விலை அதிகமாகவே வெளியாகியிருக்கிறது நார்டு 2. நார்டு CE, நார்டு மற்றும் நார்டு 2 என எல்லாவற்றிலும் விலையும் கொஞ்சமே கொஞ்சம்தான் மாறுபடுகிறது. மற்ற இரண்டையும் விட எந்த வகையில் இந்த நார்டு 2 சிறப்பாக இருக்கிறது? பார்க்கலாம்.
க்ரீன் வுட்ஸ் நிற 12 GB RAM மற்றும் 256 GB ஸ்டோரேஜ் கொண்ட மாடல் தான் நமக்கு ரிவ்யூவுக்குக் கிடைத்தது. கடந்த ஒரு மாதமாக நார்டு 2-வை பயன்படுத்திப் பார்த்தோம். இதோ நார்டு 2 ரிவ்யூ மற்றும் பயனர் அனுபவம்.
ஒன்ப்ளஸ் நார்டு 2

நார்டு சிறப்பம்சங்களையும், 9R தோற்றத்தையும் கொண்டு ஒரு கலவையான மாடலாக நார்டு 2-வை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ். ஒன்பளஸ்ஸின் சிறப்பே அதன் ஆக்ஸிஜன் OS தான். நார்டு 2-வில் ஆக்ஸிஜன் OS 11.3 பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், கலர் OS-ன் சாயலையும் நம்மால் பார்க்க முடிகிறது. ஒன்ப்ளஸ் CE-யில் கொடுக்க மறந்திருந்த அலர்ட் ஸ்லைடரை நார்டு 2-வில் மறக்காமல் கொடுத்துவிட்டது ஒன்பளஸ். ஆனால் ஒன்பளஸின் பட்ஜெட் மாடல்களில் CE-யில் மட்டுமே கொடுத்திருந்த 3.5 மிமீ ஹெட்போன் ஜாக்கை நார்டு 2-வில் கொடுக்கவில்லை. 4,500 mAh பேட்டரி, 189 கி எடை மற்றும் 65 W சார்ஜிங் வசதியுடன் வருகிறது நார்டு 2. பாக்ஸுடனே 65 W சார்ஜரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 30 நிமிடங்களில் 98 சதவிகிதம் சார்ஜ் ஆகிவிடுகிறது நார்டு 2. பேட்டரியைப் பொருத்தவரை ஒன்றரை நாள்கள் தாக்குப்பிடிக்கிறது. பாஸ்ட் சார்ஜிங் என்பதால் தயங்காமல் மொபைலைப் பயன்படுத்த முடிகிறது. நார்டு 2-விற்கு இரண்டு வருடங்களுக்கு சாப்ட்வேர் அப்டேட்களும், மேலும் ஒரு வருடத்திற்கு செக்யூரிட்டி அப்டேட்களும் உண்டு என உறுதியளித்திருக்கிறது ஒன்ப்ளஸ். தற்போது ஆண்ட்ராய்டு 11-ல் இயங்கி வந்தாலும், ஆண்ட்ராய்டு 13 வரை சாப்ட்வேர் அப்டேட் உண்டு.

6.43" 90hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். போட்டியாளர்கள் இதே விலைக்கு 120hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொடுக்கும்போது, ஒன்ப்ளஸூம் கொடுத்திருக்கலாம். முன்பக்கம் 32 MP செல்ஃபி கேமராவும், பின்பக்கம் 50 MP ப்ரைமரி சென்சார் (Sony IMX766), 8 MP அல்ட்ரா வைடு மற்றும் 2 MP மோனோக்ரோம் கேமராவையும் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். ப்ளாக் & ஒயிட் படங்கள் வேண்டுமென்றால் எடிட் செய்வதற்கு மொபைலுக்கென்றே பல சிறந்த செயலிகள் இருக்கும்போது, மோனோக்ரோம் கேமராவிற்கு பதில் வேறு நல்ல ஆப்ஷன்களை ஒன்ப்ளஸ் யோசித்திருக்கலாம். கேமரா பெர்ஃபாமன்ஸைப் பொருத்தவரை நன்றாக இருக்கிறது. ஆனால், சிறப்பாக இருக்கிறதென்று கூற முடியாது. வெளிச்சமான இடங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் நன்றாகவே இருக்கின்றன, இயல்பாகவும் இருக்கின்றன. அல்ட்ரா வைடு மோடைப் பயன்படுத்தும் போது புகைப்படங்களின் தரம் குறைவதையும் உடனடியாக உணர முடிகிறது. முன்பு கூறியது போல மோனோக்ரோம் கேமாரவிற்கு பதில் மேக்ரோ கேமரா கொடுத்திருக்கலாம்.

OnePlus Nord 2

நார்டில் இருந்ததை விட நார்டு 2-வில் பெரிதும் அப்டேட் ஆகியிருப்பது அதன் ப்ராசஸர்தான். நார்டில் ஸ்நாப்ட்ராகன் 765G பயன்படுத்தப்பட்டிருந்தது. நார்டு 2-வில் டைமன்சிட்டி 1200-AI ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஒன்ப்ளஸ். 765G-ஐ விட அனைத்து வகையிலும் சிறப்பான பெர்ஃபாமன்ஸையே வெளிப்படுத்தியிருக்கிறது 1200-AI. 30,000 ரூபாய் விலையில் பவர்ஃபுல்லான ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது ஒன்ப்ளஸ். இந்த ப்ராசஸர் நார்டு 2-வை ஒரு ஆல்ரவுண்டர் பெர்ஃபாமராக மாற்றுகிறது. தொடர்ந்து கேம் விளையாடும் போது மட்டும் நார்டு 2 கொஞ்சம் சூடாவதை உணர முடிகிறது. மற்றபடி ப்ராசஸர் க்ளாஸ் தான்.

ராக்கெட் வேகத்தில் ஒன்ப்ளஸின் ப்ரீமியம் போன்களின் விலைகள் ஏறிக் கொண்டே போக, ப்ரீமியம் வாடிக்கையாளர்களைத் தவிர்த்து மிட்ரேட்ஞ் வாடிக்கையாளர்களையும் கவர்வதற்காக நார்டு சீரிஸைக் களமிறக்கியது ஒன்ப்ளஸ். நார்டு சீரிஸின் முதல் போனான நார்டு ஹிட்டடிக்க அதன் இரண்டாம் பாகமாக நார்டு 2-வை ஒன்ப்ளஸ் வெளியிட்டிருக்கிறது. எதிர்பார்த்தபடியே சிறந்த ஆல்ரவுண்டராகவே வெளியாகியிருக்கிறது நார்டு 2. கேமிங்தான் உங்கள் முதன்மையான தேவை என்றால் போகோ F3 GT ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். ஆனால், ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ் வேண்டும் என்றால் நார்டு 2 சிறந்த சாய்ஸ்தான்.

ஒன்ப்ளஸ் நார்டு 2

ப்ளஸ்:

  • நல்ல பெர்ஃபாமன்ஸ்

  • ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

  • இரண்டு ஆண்டுகளுக்கு அப்டேட்

மைனஸ்:

  • 120Hz டிஸ்ப்ளே கொடுத்திருக்கலாம்

  • 3.5 மிமீ ஜாக் இல்லை.

  • IP ரேட்டிங் இல்லை

விலை:

  • 6 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.27,999

  • 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.29,999

  • 12 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் - ரூ.34,999



from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib