Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

பயனர்களின் பயன்பாட்டிற்கு வெளியானது Windows 11... பதிவிறக்கம் செய்வது எப்படி?

உலகம் முழுவதும் பயனர்களின் பயன்பாட்டிற்கு வெளியானது விண்டோஸ் 11 இயங்குதளம்.

மைக்ரோசார்ட் நிறுவனத்தின் சமீபத்திய இயங்குதளமான விண்டோஸ் 11 நேற்று (அக். 5) முதல் பயனர்களின் பயன்பாட்டிற்கு வெளியானது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும் கணினிகளில் இலவசமாகவே விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், Asus, HO மற்றும் Lenovo ஆகிய நிறுவனங்கள் விண்டோஸ் 11 இயங்குதளத்தைக் கொண்ட கணினிகளை விற்பனை செய்யவிருக்கின்றன எனத் தெரிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். விரைவில் Acer மற்றும் Dell ஆகிய நிறுவனங்களும் அதேபோல் விண்டோஸ் 11 இயங்குதளம் கொண்ட கணினிகளை விற்பனை செய்யவிருக்கின்றன.

Windows 11 system requirements check

குறைந்தபட்ச அளவுகோல் (Requirements) என்ன?

ஒரு கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால், அது சில குறைந்தபட்ச அளவுகோலினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். விண்டோஸ் 11-ற்கான குறைந்தபட்ச அளவுகோலாக மைக்ரோசாப்ட் பக்கத்தில் குறிப்பிடப்படிருப்பது,

  • ப்ராசஸர்: 1 Ghz அல்லது அதற்கும் மேல் வேகம் கொண்ட, 2 கோர்கள் கொண்ட 64 பிட் ப்ராசஸரைக் கொண்டிருக்க வேண்டும்.

  • ரேம்: 4 GB

  • ஸ்டோரேஜ்: 64 GB

  • TPM: Trusted Platform Module v2.0

  • டிஸ்ப்ளே: High definition display (720p)

  • கிராபிக்ஸ் கார்டு: DirectX 12 அல்லது அதற்கு அடுத்து வெளியான கிராபிக்ஸ் கார்டுகளைக் கொண்டிருக்க வேண்டும்.

விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்வதற்கான குறைந்தபட்ச அளவுகோல் என்ன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Also Read: பலமான பாஸ்வேர்டை உருவாக்கவும், ஹேக்கிங்கைத் தவிர்க்கவும் 15 வழிமுறைகள்! | Doubt of Common Man

நம் கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா எனத் தெரிந்து கொள்வது எப்படி?

ஒரு கணினி விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்ய உகந்ததா எனத் தெரிந்து கொள்ள PC Health Check App என்ற ஒரு செயலியை வழங்கியிருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். இந்தச் செயலியைக் கணினியில் பதிவிறக்கம் செய்து, நமது கணினியில் விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்ய முடியுமா எனத் தெரிந்து கொள்ளலாம்.

PC Health Check App-ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

நமது கணினி குறைந்தபட்ச அளவுகோலினை பூர்த்தி செய்தது எனில், கணினி அமைப்புகளில் சென்று இயங்குதளத்தை அப்டேட் செய்து கொள்ளலாம். இயங்குதளத்தை அப்டேட் செய்ய,

Settings - Update and Security - Windows Update

மேற்கூறிய வழிமுறையில் இயங்குதளத்தை அப்டேட் செய்வதற்கான வசதி காட்டப்படவில்லை எனில், மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து விண்டோஸ் இயங்குதளத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 11 இயங்குதளப் பதிவிறக்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.

Windows 11

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் இருக்கும் Cortana போன்ற வசதிகள் விண்டோஸ் 11 இயங்குதளத்தில் இருக்காது எனத் தெரிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட். ஒரு புது வகையான பயனர் அனுபவத்தை இந்தப் புதிய விண்டோஸ் 11 வழங்கும் எனவும் தெரிவித்திருக்கிறது. பயனர்களும் ஒரு புதுவகையான அனுபவத்திற்காகக் காத்திருக்கிறார்கள்.

2022 பாதிக்குள் அனைத்து விண்டோஸ் 10 பயனர்களுக்கும் விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்வதற்கான வசதி அளிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 11 இயங்குதளத்தைப் பெற முடியாதவர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே உபயோகிக்கலாம், விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு 2025 அக்டோபர் 14 வரை தேவையான வசதிகள்/அப்டேட்கள் அளிக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது அந்நிறுவனம்.

நீங்கள் விண்டோஸ் 11 பதிவிறக்கம் செய்துவிட்டீர்களா? உங்கள் அனுபவம் எப்படி இருக்கிறது என கமென்ட்டில் சொல்லுங்கள்!


from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib