Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

அரசியல், சூதாட்டம், மதுப் பொருள்கள் விளம்பரங்களுக்கு `நோ'... யூடியூப் முடிவுக்குக் காரணம் என்ன?

யூடியூப் (Youtube) தங்கள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் காண்பிக்கப்படும் மாஸ்ட்ஹெட் (Masthead) விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.

யூடியூப்-ன் செயலி அல்லது தளம் என எதுவாக இருந்தாலும் உள்நுழைந்தவுடன் முகப்புப் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை நம்மால் பார்க்க முடியும். இந்த இடத்தில் நிறுவனங்கள் விளம்பரப்படுத்த சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள். அதன்படி, மதுப் பொருள்கள், சூதாட்டம் மற்றும் அரசியல் சார்ந்த விளம்பரங்களை இனி முகப்புப் பக்கத்தில் விளம்பரம் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கிறது கூகுள்.

Youtube ad policy

மதுப் பொருள்கள் மட்டுமின்றி, மதுப் பொருள்களின் விற்பனை மட்டுமல்லாது, அது சார்ந்த எந்த ஒரு விளம்பரங்களையும் முகப்புப் பக்கத்தில் இனி விளம்பரம் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கிறது கூகுள். ஏன் முகப்புப் பக்கத்தில் காட்டப்படும் விளம்பரங்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள் என்ற கேள்வி எழும். இந்த இடத்தில் தோன்றும் விளம்பரங்கள் சாதாரணமாக யூடியூபில் மற்ற இடங்களில் காட்டப்படும் விளம்பரங்களை விட அதிகப் பார்வையாளர்களைச் சென்றடையும். எனவேதான் முகப்புப்பக்க விளம்பரங்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்திருக்கிறது கூகுள்.

Also Read: Vikatan Poll: தமிழ் யூடியூபர்களின் செயல்பாடு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!

YouTube

கூகுள் நிறுவனம் தங்கள் விளம்பரக் கொள்கைகளில் அவ்வப்போது மாற்றங்களைக் கொண்டு வருவது சகஜம்தான். கடந்தாண்டும் முகப்புப் பக்க விளம்பரங்கள் குறித்த மாற்றம் ஒன்றைக் கொண்டு வந்தது கூகுள். எல்லா நேரமும் முகப்புப் பக்கத்தில் மாஸ்ட்ஹெட் விளம்பரங்கள் மட்டுமே இல்லாமல், டார்கெட்டட் விளம்பரங்களையும் முகப்புப் பக்கத்தில் காட்டுவது என்ற முடிவை அறிவித்தது கூகுள். இதனால், ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே மொத்தமாக யூடியூபின் முகப்புப் பக்கத்தை அலங்கரிப்பதில் இருந்து தவிர்க்க முடியும். இந்த முடிவுகள் அனைத்துக்கும் காரணம், முகப்புப்பக்கத்தில் இருக்கும் விளம்பரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம்தான். அதிக மக்களைச் சென்றடைவதால், அது சரியான முறையில் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.



from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib